பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
HADR பயிற்சி – டைகர் டிரையம்ஃப்
- டைகர் டிரையம்ஃப் – இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான முப்படை (தரைப்படை, கடற்படை, விமானப்படை) மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சி.
- காலஅட்டவணை: ஏப்ரல் 1 முதல் 13, 2025 வரை.
- நோக்கம்: HADR செயல்பாடுகளுக்கான இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துதல்.
- நெருக்கடி நிலைகளில் இந்திய மற்றும் அமெரிக்க கூட்டுப் பணிக் குழுக்களுக்கு (JTF) இடையே திறம்பட ஒத்துழைப்பை உறுதிசெய்ய கூட்டு ஒருங்கிணைப்பு மையத்திற்கான (CCC) நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்குதல்.
- இடம்: விசாகப்பட்டினம்
“சாகர்“ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி
- இந்திய கடற்படையின் “சாகர்“ திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
- கொமொரோஸ், கென்யா, மடக்ஸ்கர், மாலத்தீவு, மோரீஷஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா.
- இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஒத் துழைப்பை இந்திய பெருங்க டல் கப்பல் (ஐஓஎஸ்) சாகர் திட்டம் உறுதிப்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் கடலோர ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, ஐஓஎஸ் சாகர் என பெயர் மாற்றப்பட்டு அதில் இந்திய கடற்படை வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
- தெற்குலகுக்கான இந்தியாவின் ‘மகாசாகர்‘ (பிராந்தியங்களுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான முழுமையான முன்னேற்றம்) புதிய தொலை நோக்குப் பார்வையை அறிவித்தார்.
- ஆப்பிரிக்க நாடுகளுடன் பன்முக கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் “ஆப்பிரிக்கா – இந்தியா முக்கிய கடற்சார் ஒத்துழைப்பு பயிற்சி ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது.
- இந்தப் பயிற்சியை இந்தியாவும் தான்சானியாவும் இணைந்து நடத்துகிறது. தான்சானியாவின் தார் இஸ் சலாம் கடலோரப் பகுதியில் நடைபெறவுள்ளது.