இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியா – போலந்து
- பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.
- 45 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
- மொரார்ஜி தேசாய் 1979இல் போலந்தைப் பார்வையிட்டார்.
- இந்தியா மற்றும் போலந்து இடையேயான இராஜதந்திர உறவுகள் 1954இல் முறையாக நிறுவப்பட்டன.
போலந்து பற்றி
- தலைநகரம் – வார்சா
- நாணயம் – போலிஷ் ஸ்லோட்டி
- பிரதமர் – டொனால்ட் டஸ்க்
நலத்திட்டங்கள்
மின்துறைக்கான இணையதளம்
- மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் புது டில்லியில் மின்துறையின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த மூன்று இணையதளங்களைத் தொடங்கினார்.
- திட்டங்களை இணைய வழியில் கண்காணிப்பதற்கான இணையதளம் – அனல் மின்
(PROMPT): அனல் மின் திட்டங்களின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கு உதவுகிறது.
- மின்துறைக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (DRIPS): அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே தொடர்பு புள்ளியாக செயல்படுகிறது.
- JAL VIDYUT DPR: நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு.
- இந்த இணையதளங்கள் 2047க்குள் விக்சித் பாரத் இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவுகின்றன.