வரலாறு

உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்பு

G7 உச்சி மாநாடு

  • G7 உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் ஜூன் 13-15, 2024 அன்று நடைபெற்றது.
  • G7 உச்சி மாநாட்டில் இந்தியா ஒரு பார்வையாளர் நாடாக பங்கேற்றது.
  • உச்சிமாநாட்டின் போது விவாதிக்கப்பட்ட முக்கியமான தலைப்புகள் – செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல்.

G7 உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகள்

  • G7 அபுலியா உணவு அமைப்பு முன்முயற்சி (AFSI): உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான கட்டமைப்புத் தடைகளைக் கடக்க முயற்சிகளை தீவிரப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான கூட்டாண்மை (PGII): இது வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான கூட்டு முயற்சியாகும்.
  • இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) : சவுதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வழியாக IMEC அமைத்தல்.

G7 பற்றி

  • முதல் உச்சி மாநாடு 1975
  • உறுப்பினர்கள் – இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன்  மற்றும் அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியமும் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது
  • குறிக்கோள் – 1973 ஆற்றல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையிலான  பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்புக்கான தளமாகும்.

விருதுகள் மற்றும் கௌரவம்

சாகித்ய அகாடமி விருதுகள்

  • சாகித்ய அகாடமி சமீபத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் மற்றும் பால் சாகித்ய புரஸ்கார் வெற்றியாளர்களை அறிவித்தது.
  • லோகேஷ் ரகுராமன் சிறுகதைகளின் தொகுப்பான விஷ்ணு வந்தார் என்ற புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருதைப் பெற்றார்.
  • யூமா வாசுகி தனது தன்வியின் பிறந்தநாள் (கதைகள்) புத்தகத்திற்காக பால் சாகித்ய புரஸ்கார் விருதைப் பெற்றார்.
  • சாகித்ய அகாடமி விருதுகள் பற்றி
  • ஞானபீட விருதுக்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த இலக்கிய விருதாகும்.
  • நிறுவப்பட்டது – மார்ச் 12, 1954 .
  • இது இந்தியாவின் நேஷனல் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது
  • தலைவர் – சந்திரசேகர கம்பரா
Next Current Affairs வரலாறு >