தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

தமிழகத்தின்  IGST வரிவசூல் 

  • ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் (IGST) கீழ் 1,523.95 கோடியை தமிழகம் வசூலிக்க வணிக வரித்துறையால் அமைக்கப்பட்ட வரி ஆராய்ச்சிப் பிரிவு உதவியுள்ளது.
  • IGST என்பது மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மத்திய அரசால்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது மேலும்  மாநிலங்களுடன் வரிப்பகிர்வு  செய்யப்படுகிறது.

வரி ஆராய்ச்சி பிரிவு பற்றி

  • தொடக்கம்  – டிசம்பர் 30, 2022.
  • குறிக்கோள் – வருவாய் போக்கை ஆய்வு செய்து, வருவாயை பெருக்க நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.

ஜிஎஸ்டி பற்றி:

  • தொடக்கம் – ஜூலை 1, 2017
  • அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டம் 2016 கீழ் உருவாக்கப்பட்டது .
  • மூன்று வகையான ஜிஎஸ்டிகள் உள்ளன.அவை, CGST (மத்திய) SGST (மாநிலம்) மற்றும் IGST (ஒருங்கிணைந்தவை)
  • வரி அடுக்குகள் – 0%, 5%, 12%, 18%, 28%.
  • ஜிஎஸ்டி கவுன்சில் பிரிவு 279A இன் கீழ் உருவாக்கப்பட்டது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்

  • 2024 ஆகஸ்ட் மாதம் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • குறிக்கோள் – பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த  மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவித்தல்.
  • பலன் – அரசு நடத்தும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பிறகு உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1,000 நிதியுதவி வழங்கப்படும்.

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >

People also Read