முக்கிய தினங்கள்
சர்வதேச தாலசீமியா தினம் 2024
- தாலசீமியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று சர்வதேச தாலசீமியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ”Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassaemia Treatment for All.”
குறிப்பு
- தேசிய கதிர் அரிவாள் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் 2047 ஆம் ஆண்டிற்குள் கதிர் அரிவாள் மரபணு பரிமாற்றத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்திகளில் உள்ள இடங்கள்
ஷிங்கு லா சுரங்கப்பாதை
- நிமு-பாதம்-தர்ச்சா சாலை இணைப்பில் 4.1 கிமீ தூரத்திற்கு ஷிங்கு லா சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த சுரங்கப்பாதையானது லடாக்கின் எல்லைப் பகுதிகளுக்கு அனைத்து வானிலை இணைப்புகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஷிங்கு லா சுரங்கப்பாதை யோஜக் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
யோஜக் திட்டம் பற்றி
- இது எல்லைப்புற சாலைகள் ஆணையத்தின் (BRO) மூலம் செயல்படுத்தப்பட்டது.
- நோக்கம் – சாலை உள்கட்டமைப்பை அதிகரிப்பது மற்றும் லடாக்கிற்கான இணைப்பை வலுப்படுத்துவதாகும்.