தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

38 மாவட்டங்களில் ஆரோக்கிய நடைபயணத்திட்டம்

  • தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஆரோக்கிய நடைபயணத்திட்டம் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது .
  • அடையாளம் காணப்பட்ட நடைபாதைக்கான கூகுள் மேப் இணைப்புகள் விரைவில் பொது சுகாதார இயக்குநரகம் (DPH) மற்றும் தடுப்பு மருத்துவத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
  • ஆரோக்கிய  நடைப்பாதையுடன்கூடிய  8 கிமீ நடைப்பாதையானது   டோக்கியோ மாதிரியை ஒத்து சுகாதாரத்துறை வடிவமைத்துள்ளது.

விரைவான நகரமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களை ஆய்வு வெளிப்படுத்துகிறது

  • இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன்  (IITM) இணைந்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு விரைவான நகரமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்துகிறது
  • அடுத்த நான்கு தசாப்தங்களில், சென்னை பெருநகரப் பகுதியில் (CMA) நிலப் பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் கட்டப்படவுள்ள  பரப்பு அதிகரிப்பு ஆகியவை விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை குறைக்கும் .இது நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர் திறனை மோசமாக பாதிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

கணினிவழி சேவைகளை திறம்பட அளிக்க எண்மமயமாக்கல் வியூக ஆவணம் வெளியீடு

  • பொதுமக்களுக்கான கணினிவழிச் சேவைகளைத்திறம் பட வழங்குவதற்கு வகை செய்வதற்காக தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இது ஆளுகை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தியின் நோக்கங்கள்

  • குடிமக்களுக்கு அணுகல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல்.
  • தமிழகத்தை புதுமை மற்றும் தொழில் முனைவோர் மையமாக மாற்றுதல் .
  • இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்துதல்.
  • செயலிகள் மற்றும் இணைய தளங்கள் மூலம் அரசாங்க சேவைகள் குடிமக்களுக்கு கிடைக்கின்றன என்பதை உறுதி செய்தல்
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >