பாரத் NCAP: இந்தியாவின் கார் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்
- பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (Bharat NCAP) என்பது உள்நாட்டு கார் சோதனைத் திட்டமாகும். இதில் கார் உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து தங்கள் மாடல்களை சோதனை செய்து, விபத்தில் தங்கள் பாதுகாப்பைக் குறிக்கும் நட்சத்திர மதிப்பீட்டைப் பெறலாம்.
- பாரத் NCAP உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் (குளோபல் NCAP) வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மூன்று அளவுருக்களின் மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு வாகனத்திற்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான மதிப்பீடு ஒதுக்கப்படும்.
- பெரியோர் பாதுகாப்பு
- குழந்தைகள் பாதுகாப்பு
- காரில் இருக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்.
- சோதனை முடிவுகள் பாரத் NCAP நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு அதன் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (CIRT) இதற்கான சான்றிதழை வழங்கும்.
(Bharat NCAP – Bharat New Car Assessment Programme)

