ஒடிஸாவில் ஓபிசி பிரிவினர் கணக்கெடுப்பு
- பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஒடிஸாவிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) தொடர்பான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: ஏ.எம்.சாப்ரே தலைமையில் குழு
- அதானி குழுமம் – ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். சாப்ரே (68) தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஓய்வு பெற்ற நீதிபதி சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற – இறக்கத்துக்கான காரணிகள் உள்பட ஒட்டுமொத்த நிலைமையையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த நிபுணர் குழுவின் பணியாகும். அதோடு முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும்.
- பங்குப் பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகள் 1957.