தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF)
- சூழல்: தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் வரவிருக்கும் நிதித் திட்டங்களுக்காகப் பயன்படுத்த, இந்திய அரசு கூடுதலாக ₹30,000 கோடி முதலீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி பற்றிய தகவல்கள்
- தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF) என்பது இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த துறைகளில் முதலீடு செய்யும் ஒரு நிதி மேலாண்மை அமைப்பாகும்.
- இது 2015-இல் நிறுவப்பட்டது; இது இந்தியாவின் முதல் ‘இறையாண்மைச் செல்வ நிதி’ ஆகும்.
- NIIF-க்கு இந்திய அரசின் ஆதரவு உள்ளது. இது இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
- இடர் மேலாண்மையுடன் நல்ல வருவாயை ஈட்டும் நோக்கத்துடன், இது முக்கியமாக உள்கட்டமைப்பு, தனியார் பங்கு மற்றும் பிற துறைகளில் முதலீடு செய்கிறது.
- இவ்நிதி ‘கிரீன்ஃபீல்ட்’ திட்டங்கள் ‘பிரவுன்ஃபீல்ட்’ திட்டங்கள் மற்றும் பாதியில் நின்ற திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.
- NIIF-இல் இந்திய அரசு 49% பங்குகளைக் கொண்டுள்ளது; மீதமுள்ள பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களிடம் உள்ளன.
- NIIF 4.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கிறது; இதன் மூலம் இது இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியாகத் திகழ்கிறது.
- அரசின் ஆதரவு பெற்றிருந்தாலும், NIIF தனது முதலீட்டு முடிவுகளைத் தன்னிச்சையாகவே எடுக்கிறது.
- இது அனுபவம் வாய்ந்த முதலீடு மற்றும் உள்கட்டமைப்புத் துறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
- NIIF-இன் நிதிகள், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் ‘மாற்று முதலீட்டு நிதிகள்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இது இந்திய மற்றும் சர்வதேச நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டுகிறது.
NIIF ஆல் நிர்வகிக்கப்படும் நிதிகள்
NIIF மாஸ்டர் ஃபண்ட்
- முக்கியமாக சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்கிறது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிதியாகும்.
NIIF பிரைவேட் மார்க்கெட்ஸ் ஃபண்ட்
- உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் கவனம் செலுத்தும், மற்ற தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படும் நிதிகளில் முதலீடு செய்கிறது.
NIIF ஸ்ட்ராடஜிக் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்
- இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு முக்கியமான பெரிய வணிகங்கள் மற்றும் புதிய (கிரீன்ஃபீல்ட்) திட்டங்களில் முதலீடு செய்து அவற்றை மேம்படுத்துகிறது.

