சிறந்த நபர்கள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி

  • சூழல் :பிரதமர், பிரபல இலக்கியவாதியும் தேசியவாத சிந்தனையாளருமான பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி பற்றி 

ஆரம்பகால வாழ்க்கை:

  • பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838-ஆம் ஆண்டு ஜூன் 26-அன்று மேற்கு வங்காளத்தின் நைஹாட்டியில் பிறந்தார்.
  • அவர் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்; கல்வியை முடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கப் பணியில் சேர்ந்தார்.

தேசியவாதம் மற்றும் இலக்கியம்:

  • இவரது புகழ்பெற்ற நாவலான ‘ஆனந்தமடம்’ – இது பின்னர் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது – சந்நியாசி கிளர்ச்சியை மையமாகக் கொண்டது.
  • இந்நாவல் தேசபக்தி உணர்வைத் தூண்டியதுடன், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடனும் நெருங்கிய தொடர்புடையதாக மாறியது.
  • இந்தியாவின் தேசியப் பாடலான “வந்தே மாதரம்” ‘ஆனந்தமடம்’ நாவலிலிருந்து எடுக்கப்பட்டது; இது சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு சக்திவாய்ந்த முழக்கமாகத் திகழ்ந்தது.

புகழ்பெற்ற படைப்புகள்

    • ‘ராஜமோகனின் மனைவி’  ஒரு இந்தியரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில நாவலாகும்.
    • இவரது நன்கு அறியப்பட்ட வங்காள மொழி நாவல்கள் பின்வருமாறு:
  • துர்கேஷ்நந்தினி (1865)
  • கபாலகுண்டலா (1866)
  • விஷவிருக்ஷா (1873)
  • இவ்விலக்கியப் படைப்புகள் பெண்கள் உரிமை, குழந்தை திருமணம் மற்றும் சாதிப் பாகுபாடு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசின.
  • இவரது புகழ்பெற்ற சமயச் சார்ந்த படைப்பு ‘கிருஷ்ண சரித்திரம்’ ஆகும்.

வங்காள மறுமலர்ச்சியில் பங்கு

  • 1872-இல், பங்கிம் ‘பங்கதர்ஷன்‘ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
  • இவ்வஇதழ் வங்காள தேசியவாதத்தைப் பரப்பவும், இலக்கிய மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவியது.
  • படித்தவர்களையும் சாமானிய மக்களையும் இணைக்கவும், வங்காள அடையாளத்தை வலுப்படுத்தவும் ‘பங்கதர்ஷன்’ இதழ் பயன்பட வேண்டும் என்று பங்கிம் விரும்பினார்.
  • ரவீந்திரநாத் தாகூர் இவ்இதழால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்; பின்னர் அவர் அதனை மீண்டும் தொடங்கி, தேசியவாதக் கருத்துக்களையும் எழுத்துக்களையும் வெளியிட அதைப் பயன்படுத்தினார்.
Next சிறந்த நபர்கள் >