முக்கிய தினங்கள்

உலக ஒட்டக தினம்

  • உலக ஒட்டக தினம் ஆண்டுதோறும் ஜூன் 22 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒட்டக மாநாட்டின் கருப்பொருள் “Camel as Climate Resilient Dairy Animal”,என்பதாகும்.

சர்வதேச யோகா தினம்

  • யோகா தினம் என்பது யோகாவை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்; ஐக்கிய நாடுகள் சபை 2014-இல் இதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஜூன் 21, 2026 அன்று கடைப்பிடிக்கப்படும் 12-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் Yoga for Healthy Ageing என்பதாகும்.

நடப்பு தகவல்கள்

 

  • 1897-ஆம் ஆண்டு ஜூன் 22-அன்று, புனேயில் இந்தியத் தேசியவாதப் புரட்சியாளர்களான சாபேகர் சகோதரர்கள் (தாமோதர் மற்றும் பாலகிருஷ்ணா), பிரிட்டிஷ் பிளேக் நோய் தடுப்பு ஆணையர் வால்டர் சார்லஸ் ராண்ட் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாக வந்த ராணுவ அதிகாரி ஆகியோரைக் கொன்றனர்.

திருக்குறள் (எண் 862) அதிகாரம்: பகை மாட்சி

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு

 

விளக்கம் :ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாத வனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

‘காஞ்சன் தேவி குழு

  • காஞ்சன் தேவி கமிட்டி என்பது ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதில் அதன் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக 25 மே 2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஆகும்.

வைப் கோடிங்

  • வைப் கோடிங் என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு உதவியுடனான மென்பொருள் உருவாக்க அணுகுமுறையாகும். இதில், உருவாக்குநர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை இயல்பு மொழியில் விவரிக்க, செயற்கை நுண்ணறிவு பெரும்பாலான குறியீடுகளை உருவாக்குகிறது.

கலம்காரி ஓவியம் 

  • இது ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும், கையால் வரையப்பட்ட அல்லது அச்சுரு மூலம் அச்சிடப்பட்ட பருத்தித் துணி மற்றும் ஓவியங்களின் மிகவும் பிரபலமான ஒரு கலை வடிவமாகும்.
  • 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில், இது ஒரு துணி சார்ந்த கலை மரபாக உருவானது.
  • ‘கலம்’ என்ற சொல் பேனாவையும், ‘காரி’  என்ற சொல் கைவினைத்திறனையும் குறிக்கிறது.

டோங்ரியா கோந்த் பழங்குடியினர்

  • இது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழு (PVTG) சமூகம்.
  • ஒடிசாவின் கலஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களில் பரவியுள்ள நியாம்கிரி மலைகளில் டோங்ரியா கோண்ட்ஸ் பழங்கால குடியிருப்பாளர்கள்
Next முக்கிய தினங்கள >

People also Read