உலகக் கோப்பை வில் வித்தை
-
- துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில் வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.
- இரண்டின் இறுதிச்சுற்றிலுமே, பலம் வாய்ந்த அணியாகவும், இந்தியாவின் சவால் மிக்க நீண்டகால போட்டியாளராகவும் இருக்கும் தென் கொரியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- அதிலும் இந்தியர் தீரஜ் பொம்மதேவரா இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்றார்.
- வறட்சி நிலங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்புத் திறனின் அளவை அதிகரிக்கக்கூடும் என்று கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2050-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் வறட்சிக்கு ஆளாகக்கூடிய பிற நாடுகளிலும் பல பகுதிகள் கடுமையான நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்புச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்களின் ஆய்வு கணித்துள்ளது.
- சென்னை மற்றும் பல உள்மாவட்டங்கள் சமீப காலம் வரை பகல் நேரங்களில் அதிக வெப்பம் மற்றும் இரவு நேரங்களில் வெப்பத் தணிப்பு இல்லாத சூழல் என வழக்கத்திற்கு மாறாக நீண்ட கால வெப்ப அலைக்கு ஆளான நிலையில், மாநில அரசு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான, வண்ணக் குறியீடுகள் கொண்ட வெப்பம் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
- பிரிவினைக்கான ஒப்புதல் (ஜூன் 15, 1947): இந்தியப் பிரிவினைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்த மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானத்தை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1947-ஆம் ஆண்டு ஜூன் 15-அன்று நிறைவேற்றியது.
- இமாச்சலப் பிரதேசத்தில் அஞ்சல் துறையின் சார்பில் ட்ரோன் மூலம் அஞ்சல் அனுப்பும் சேவை தொடங்கப்படுவதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இம்மாநிலத்தில் உள்ள மண்டி தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கும், ரேஹர்தார் கிளை அஞ்சல் அலுவலகத்திற்கும் இடையே இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உலகின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதியளவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், உலகளாவிய விவசாய உற்பத்தியில் சுமார் 42 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.
- பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான ‘பிரியதர்ஷினி’ இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை கேரள அரசு 2026 ஜூன் 15 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தது.
பரீக்ஷா கர்மயோகி: திறன் மேம்பாட்டுத் திட்டம்
- தேசியத் தேர்வுகள் முகமை (NTA), ‘iGOT கர்மயோகி பாரத்’ தளத்தில் தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ‘பரீக்ஷா கர்மயோகி: திறன் மேம்பாட்டுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
- NTA தேர்வுகளுக்கான மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதும், காகித-பேனா அடிப்படையிலான நேரடித் தேர்வுகளை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும், சீரான தரத்துடனும் நடத்துவதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- NEET (UG) உள்ளிட்ட NTA தேர்வுகளை நடத்துவதில் ஈடுபடும் தேர்வுப் பணியாளர்கள், குறிப்பாக மையக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்காகவே இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக NTA தெரிவித்துள்ளது.
நடப்பு தகவல்கள்
திருக்குறள் (எண் 542) அதிகாரம்: செங்கோன்மை- வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
பொருள்
- உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ் கின்றன; அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங் கோலை நோக்கி வாழ்கின்றனர்.
ராணுவ தளபதி
- ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரத் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜூன் 30-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்.ராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவிவேதி இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.

