சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா உலக அளவில் 9-ஆவது இடம்

  • ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி இத்தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்தியாவின் மொத்த வனப்பரப்பு உலக அளவில் 9-ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது.மேலும், வனப்பரப்பின் வருடாந்திர அதிகரிப்பில் இந்தியா தொடர்ந்து 3-ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளது
    • அறிக்கைப்படி, உலகின் மொத்த வனப்பரப்பு 414 கோடி ஹெக்டேர் ஆகும். இதில் ரஷியா, பிரேஸில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் பாதிக்கும் மேற்பட்டவனப் பரப்பைக் (54 சதவீதம்) கொண்டுள்ளன.
    • ஆஸ்திரேலியா, காங்கோகுடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.
    • கடந்த 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வனப்பரப் பின் வருடாந்திர அதிகரிப்பில், இந்தியா 91 லட்சம் ஹெக்டேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

    ஆசியாவின் முக்கியப் பங்கு:

    • உலக வன அழிப்பு நடவடிக்கையைக் குறைப்பதில் ஆசிய கண்டத்தின் வன விரிவாக்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அறிக்கை கட்டிக்காட்டியுள்ளது.
    • 1990-2025 காலகட்டத்தில் ஆசிய கண்டம் மட்டுமே வனப்பரப்பில் அதிகரிப்பைப் பதிவு செய்த ஒரே பிராந்தியமாகும்.

    கடற்கரை பசுமைச் சுவர்

    • ஆந்திரப் பிரதேசத்தில் கடற்கரையை சீரழிவிலிருந்து காப்பாற்ற பெரிய பசுமைச் சுவர் அமைக்கப்படவுள்ளது.
    • ஆந்திரப் பிரதேசத்தின் 1,053 கி.மீ நீளமுள்ள கடற்கரை, வாழ்வாதாரம் மற்றும் சொத்து இழப்புகளுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் ஐந்து கி.மீ அகலமுள்ள ‘ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய பசுமைச் சுவர்’ கட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
    • அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, பல்லுயிர், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், “வாழும் சுற்றுச்சூழல் கேடயமாக” பணியாற்றுவதன் மூலம் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதுகாக்க இந்த சுவர் வடிவமைக்கப்படும்.
Next Current Affairs சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் >