உலக மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்
- சிங்கப்பூரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 200மீ.பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 2 நிமிஷம், 15.22 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்ற சென்னை வீரர் அரவிந்த் நயினார்.
தடகள போட்டி
- இஸ்ரேலில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றார். அத் துடன், புதிய தேசிய சாதனையும் அவர் படைத்தார்.
உலக டேபிள் டென்னிஸ்
- லாவோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் ஃபீடர் சீரிஸ் போட்டியில், இந்தியா வின் ஜி.சத்தியன் சாம்பியன் கோப்பை வென்றார்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி
- சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் எம்.பிராணேஷ்சாம்பியன் பட்டம் வென்றனர்.

