2020-21 ஆம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

2020-21 ஆம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
  • மதிப்பீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் 2020-21 ஆம் நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 0.4% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
  • நோமுரா நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021ம் ஆண்டில் மிகவும் குறைந்து 0.4% ஆக இருக்கும் என கணித்துள்ளது. கோவிட்-19 தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளது.

நோமுராவின் முன்னறிவிப்பு

  • இது 2020ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5% வரை இருக்கும் என கணித்துள்ளது. எனினும் 2021ஆம் ஆண்டில் 7.9% வரை உயரவும் வாயப்புள்ளது என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% ஆக உயரும் என்று  நோமுரா தெரிவித்துள்ளது. இது 3.5 இலக்கை விட அதிகமாகவும் மற்றும் 5.1 யை விட அதிகமாக உள்ளது.

கோல்ட்மேன் முன்னறிவிப்பு

  • ஏப்ரல் 2020இல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நிதியாண்டில் 1.6% ஆக குறையும் என்று தெரிவித்தது. எனினும் இது முந்தைய தெரிவிப்பில் 2.7% ஆக இருக்கும் என தெரிவித்து இருந்தது.
  • இந்தியாவின் பொருளாதார வளரர்ச்சி நடப்பு நிதியாண்டில் பூஜ்ய நிலையை எட்டும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் தனது மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

நோமுரா நிறுவனம்

  • தலைமையிடம் – டோக்கியோ, ஜப்பான்

கோல்ட்மேன் சாசஸ் குழுமம்

  • தலைமையிடம் – நியூயார்க், அமெரிக்கா
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >