விருதுகளும் கௌரவங்களும்

இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு விருது

  • ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் உள்பட இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு பிரிட்டன் அரசர் சார்லஸ், அரசி கமீலா ஆகியோர் சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்தினர்.
  • பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எலிஃபன்ட் ஃபேமிலி என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தின் முதுமலை வனப்பகுதியில், தாயைப் பிரிந்த யானைக் குட்டிகளைப் பராமரிக்கும் பழங்குடியின் தம்பதியின் வாழ்க்கையையும், யானைக் குட்டிகள் மற்றும் தம்பதிக்கு இடையிலான உறவையும் உயர்வுபூர்வமாக பதிவு செய்திருந்த ”தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது.
  • ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியப் படைப்பு இதுவாகும்.
  • கார்த்திகிக்கு ”தாரா” விருதும், நீலகிரியில் செயல்படும் தி ரியல் எலிஃபன்ட் கலெக்டிவ் (டிஆர்இசி) எனும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 70 பழங்குடியின கைவினைக் கலைஞர்களுக்கு ”மார்க் ஷண்ட்” விருதும் வழங்கப்பட்டது. 
  • ஆசிய யானைகளை அழிவிலிருந்து காப்பதை நோக்கமாக கொண்ட எலிஃபன்ட் ஃபேமிலி தன்னார்வ நிறுவனத்தின் நிறுவனர், மார்க் ஷண்ட் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.
Next விருதுகளும் கௌரவங்களும் >