விண்வெளி ஆய்வில் இந்தியா
வரலாற்றுப் பின்னணி
- 1962: டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழு நிறுவப்பட்டது
1969: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆக மாற்றப்பட்டது
- 1963: தும்பாவில் முதல் ராக்கெட் ஏவுதல்
- 1975: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவப்பட்டது
- 1980: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் சொந்த தயாரிப்பு செயற்கைக்கோள் SSLV-3 A.P.J. அப்துல்கலாம் தலைமையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
- எதிர்கால திட்டங்கள்:
- சந்திரயான்-4 (2027): நிலவில் இருந்து மாதிரிகள் சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் திட்டம்
- சந்திரயான்-5 (2028): ஜப்பானுடன் இணைந்து 100 நாள் நிலவு ஆய்வு செய்வதற்கான திட்டம்
மாதிரி இந்திய விண்வெளி நிலையம்
(BHARATIYA ANTARIKSH STATION)
- தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு தில்லி பாரத மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விண்வெளியில் இந்தியா சார்பில் அமைக்கப்படவிருக்கும் விண்வெளி நிலையத்தின் மாதிரி.
- ‘பாரதிய விண்வெளி நிலையம்’ என்ற பெயருடன் கூடிய இந்த விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியை வரும் 2028-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
- 52,000 கிலோ எடையுடன் கூடிய முழுமையான விண்வெளி நிலையத்தை வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறுவ இந்திய திட்டமிட்டுள்ளது.
மற்ற நாடுகளின் விண்வெளி நிலையம்
- முதல் முறையாக சோவியத் யூனியன் (ரஷியா) சார்பில் கடந்த 1982-இல் ‘சல்யூட்-7’ விண்வெளி நிலையம் விண்ணில் அமைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது.
- இரண்டாவதாக அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா நாடுகள் இணைந்து கடந்த 1998-இல் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தன. இது வரும் 2030-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவதாக சீனா சார்பில் கடந்த 2021-இல் ‘திலாங்காங்’ விண்வெளிநிலையம் விண்ணில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

