வரலாறு

சிறந்த நபர்கள்

திலகர், சந்திரசேகர் ஆசாத்துக்கு மரியாதை 

  • சுதந்திர போராட்ட வீரர்கள் லோகமான்ய பாலகங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த தினத்தில் (ஜூலை 23) பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.
  • உத்தர பிரதேசத்தில் 1906-ஆம் ஆண்டு பிறந்த ஆசாத் நாட்டின் சுதந்திரத்துக்காக 15 வயதிலேயே போராட்டக் களத்தில் குதித்து கடுமையான தண்டனைக்கு உள்ளார். தொடர்ந்து இளைஞர்களை இணைத்து புரட்சிகளின் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடினார். 24-ஆவது வயதில் ஆங்கிலேய காவல் துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார்.
  • மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகசீர்திருத்தவாதியுமான பாலகங்காதர திலகர், இந்தியாவுக்கு தன்னாட்சி வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர்களில் முதன்மையானவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுபடுத்தியவர். மகாராஷ்டிரத்தில் இப்போதும் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் ஊர்வலம், சத்ரபதி சிவாஜி ஊர்வலம் ஆகியவற்றின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்.
Next வரலாறு >