வரலாறு

சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்

எவரெஸ்ட் உச்சம் தொட்ட முதல் தமிழ் பெண்

  • எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட பெண்ணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
  • விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி சில வாரங்களுக்கு முன்பாக எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியைத் தொடங்கினார்.
  • தற்போது சிகரத்தின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
  • அவர் மே 23 அன்று உச்சியை அடைந்து மே 26 அன்று காத்மாண்டு திரும்பினார்.
  • சிகரத்தை அடைந்து முகாமுக்குத் திரும்புவதற்கு அவருக்கு 56 நாட்கள் ஆனது.

குறிப்பு:

  • பச்சேந்திரி பால்-முதல் இந்திய பெண் எவரெஸ்ட் சிகரத்தில் – 23 மே 1984.

நியமனங்கள்

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபுர்வாலா பதவியேற்பு 

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபுர்வாலா 2023 மே 28ல் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Next வரலாறு >