வரலாறு

மாநிலங்களின் சுயவிவரம்

தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு

  • சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • சென்னையில் நிதி நுட்ப நகரம் அமைக்கவும், நிதி நுட்பச் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் நிதிநுட்பக் கோபுரத்தை அமைக்கவும் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறிப்பு:

  • 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் ”தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021” என்ற சிறப்புக் கொள்கையை அரசு வெளியிட்டிருக்கிறது.
  • இது நிதி நுட்பத் துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச் சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களைச் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.

உலக அமைப்புகள்

ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி-20 உறுப்பினர் சேர்க்கை

  • இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
  • பிரதமர் சர்வதேச அரங்கில் ஆப்பிரிக்காவின் குரலை வலுப்படுத்தவும், ”நமது பகிரப்பட்ட உலகம்” எதிர்காலத்தை வடிவமைப்பதில் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
  • இது நியாயமான, உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவமான உலகளாவிய நிர்வாகத்திற்கான சரியான படியாக இருக்கும் என்று ஆப்பிரிக்க நாடுகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆப்பிரிக்க யூனியன் (AU) பற்றி:

  • AU 55 உறுப்பு நாடுகளைக் கொண்டது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் ஆப்பிரிக்காவின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அமைப்பாகக் கருதப்படுகிறது.
  • இது ஆப்பிரிக்க நாடுகளின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
  • இது அதிகாரப்பூர்வமாக 2002 இல் தொடங்கப்பட்டது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் ஆப்பிரிக்க கண்ட ஒற்றுமையின் அடையாளமாகும்.

விளையாட்டு

2023 ஸ்குவாஷ் உலக சாம்பியன் 

  • டபிள்யுஎஸ் எஃப், எஸ்ஆர்எஃப்ஐ, எஸ்டிடிஏ சார்பில் சென்னையில் நடைபெற்ற உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது எகிப்து.
  • உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் தொடங்கியது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார்.

குறிப்பு:

  • புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவும், ஜப்பானும் 3-ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டன.
  • சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பையை அளித்தார்.

வரலாறு படைத்தது சாத்விக்/சிராக் இணை

  • இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
  • ”சூப்பர் 1000” போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை அவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.

குறிப்பு:

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (தங்கம்), தாமஸ் கோப்பை போட்டி (தங்கம்), உலக சாம்பியன்ஷிப் (வெண்கலம்), சையது மோடி பாட்மின்டன் போட்டி (தங்கம்), தாய்லாந்து ஓபன் (தங்கம்), இந்தியா ஓபன் (தங்கம்), பிரெ ஞ்சு ஓபன் (தங்கம்) ஆகிய பதக்கங்களுடன் தற்போது இந்தோனேசிய பட்டத்தையும் தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டது இந்த இணை.
Next வரலாறு >