வரலாறு

முக்கிய தினங்கள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் – ஜுன் 12

  • உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
  • நோக்கம் – குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த.

2025-க்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லா தமிழகமே இலக்கு

  • குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, வெளியிட்ட செய்திக் குறிப்பில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

ஆசிய ஜுனியர் மகளிர் ஹாக்கி இந்தியா சாம்பியன்

  • ஆசிய ஜுனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
  • ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜப்பானின் ககமிகாஹரா நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-தென்கொரிய அணிகள் மோதின.

குறிப்பு

  • இதற்கு முன்பு இந்தியா 2012-இல் ரன்னர் ஆக வந்திருந்தது.
  • தென் கொரியா நான்கு முறை சாம்பியன் 

உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா

  • இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் முதன்முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதி ஆட்டத்துக்கு முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகளான ஆஸ்திரேலியா-இந்தியா தகுதி பெற்றன.
  • இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

குறிப்பு

  • ஆஸி, அணி 5 முறை ஒரு நாள் உலகக் கோப்பை பட்டத்தையும், டி20 உலக சாம்பியன் பட்டத்தை ஒரு முறையும் வென்றிருந்தது. தற்போது முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
  • கடந்த 2013-இல் இறுதியாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது.

பிரெஞ்சு ஓபன்: ஸ்வியாடெக் சாம்பியன் 

  • பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.
  • இறுதிச் சுற்றில் அவர் செக் குடியரசின் கரோலின் முசோவாவை சாய்த்தார். இதன் மூலம், ஸ்வியாடெக் தனது 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும், பிரெஞ்சு ஓபனில் 3-ஆவது கோப்பையையும் வென்றிருக்கிறார்.

பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

  • பிரெஞ்ச் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் 23-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.
  • ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் செர்பிய வீரர் ஜோகோவிச்-நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மோதினர்.
  • இந்த வெற்றி மூலம் பிரெஞ்ச் ஓபனில் மூன்றாவது மற்றும் ஒட்டுமொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார் ஜோகோவிச்.
  • நடாலுடன் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற சாதனையை சமன் செய்திருந்த ஜோகோவிச் அதை தற்போது முறியடித்துள்ளார்.
  • 10 ஆஸி. ஒபன், 7 விம்பிள்டன், தலா 3 யுஎஸ் ஓபன், பிரெஞ்ச் ஓபன் பட்டங்கள் இதில் அடங்கும்.

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம்

  • ஆஸ்திரேலிய ஓபன் – ஜனவரி மத்தியில்
  • பிரெஞ்ச் ஓபன் (ரோலண்ட் கரோஸ்) – மே மாத இறுதியில் இருந்து ஜுன் தொடக்கம் வரை
  • விம்பிள்டன் – ஜுன்-ஜுலையில்
  • US ஓபன் – ஆகஸ்ட்-செப்டம்பரில்.
Next வரலாறு >