வரலாறு

பாதுகாப்பு

ஓமன் வளைகுடாவில் இந்தியா-பிரான்ஸ்-யுஏஇ இடையேயான முதல் முத்தரப்பு கடல்சார் பயிற்சி

  • இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு பயிற்சியின் முதல் பதிப்பு ஓமன் வளைகுடாவில் 2023 ஜுன் 7 முதல் 9 வரை நடைபெற்றது.

நோக்கம்

  • மூன்று கடற்படைகளுக்கு இடையே முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
  • கடல் சூழலில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளல்.

பங்கேற்பாளர்கள்

  • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் (இந்திய கடற்படை கப்பல்) தர்காஷ் (2012 – இல் இயக்கப்பட்ட இரண்டாவது தல்வார் வகை போர்க்கப்பல்)
  • பிரெஞ்சு கடற்படையில் பிரெஞ்சு கப்பல் Surcouf மற்றும் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள், பிரேஞ்சு ரஃபேல் விமானங்கள் 
  • ஐக்கிய அரபு அமீரக கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் 

குறிப்பு

  • ஓமன் வளைகுடா வடக்கில் ஈரான் மற்றும் பாகிஸ்தானையும், தெற்கில் ஓமன் மற்றும் மேற்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

பிரான்ஸ் பற்றி

  • தலைவர் – இம்மானுவேல் மேக்ரான்
  • பிரதமர் – எலிசபெத் போர்ன்
  • தலைநகரம் – பாரிஸ்
  • நாணயம் – யூரோ (2002க்கு முன், பிராங்க்)

UAE பற்றி

  • ஜனாதிபதி – முகமது பின் சயீத் அல் நஹ்யான்
  • பிரதமர் – முகமது பின் ரஷித் அல் மக்தூம்
  • தலைநகரம் – அபுதாபி
  • நாணயம் – திர்ஹாம்

விளையாட்டு

ஐஎஸ்எஸ்எஃப் ஜுனியர் உலகக் கோப்பை 2023ல் இந்தியா முதலிடம் பிடித்தது

  • ஜெர்மனியின் சுஹலில் நடைபெற்ற ISSF ஜுனியர் உலகக் கோப்பை 2023 பதக்கப் பட்டியலில் இந்தியா 6 தங்கம், ஆறு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

பதக்கங்களின் எண்ணிக்கை

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 இந்தியா 6 6 3 15
2 கொரியா 6 5 1 12
3 அமெரிக்கா 5 4 0 9

  தங்க பதக்கம் வென்ற இந்தியர்கள்

போட்டியாளர்கள் போட்டி
சயின்யம் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல்
தனுஷ் ஸ்ரீகாந்த் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள்
அமன்பிரீத் சிங் ஆண்களுக்கான 25 மீ பிஸ்டல்
கௌதமி பானோட்/அபினவ் ஷா 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி
கௌதமி பானோட்/சுவாதி சௌத்ரி/ சோனம் உத்தம் மஸ்கர் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் அணி
மேகனா சாதுலா/பயல்/காத்ரி/சிம்ரன்ப்ரீத் கவுர் பிரார் பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி
Next வரலாறு >