பாதுகாப்பு
நவீன “அக்னி பிரைம்” ஏவுகணை சோதனை வெற்றி
- அணு அயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன “அக்னி பிரைம்” ஏவுகணை ஒடிஸா மாநில கடல் பகுதியில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏற்கெனவே 3 முறை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக, முதன் முறையாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு, ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அக்னி-P பற்றி
- அக்னி பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரிசையில் இது ஆறாவது ஏவுகணையாகும்.
- இரட்டை வழிகாட்டுதல் அமைப்புடன் நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கும்.
- செயல்பாட்டு வரம்பு – 1000-2000 கிலோமீட்டர்கள்
இந்தியா-மாலத்தீவுகள் இடையேயான ஏக்தா (Ekatha) பயிற்சி
- மாலத்தீவில் இந்திய கடற்படை டைவர்ஸ் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையுடன் (MNDF) ஜுன் 4 முதல் ஜுலை 3 வரை நடைபெறும் ஏகதா பயிற்சியின் ஆறாவது பதிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- டைவிங் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளில் திறனை மேம்படுத்துவதற்காக இரு படைகளுக்கும் இடையே வருடாந்திர பயிற்சி நடத்தப்படுகிறது.
மாலத்தீவு பற்றி
- அதிபர் – இப்ராஹிம் முகமது சோலி
- தலைநகரம் – மாலி
- நாணயம் – மாலத்தீவு ரூபியா
முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள்
செர்பிய அதிபருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திப்பு
- செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கை அந்நாட்டுத் தலைநகர் பெல்கிரேடில் சந்தித்துப் பேசினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
- செர்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.
- அணிசேராநாடுகள் இயக்க காலத்தில் இருந்தே இந்தியா, செர்பியா இடையிலான உறவுகள் விசேஷமானவை.
செர்பியா பற்றி
- அதிபர் – அலெக்சாண்டர் வுசிக்
- தலைநகரம் – பெல்கிரேட்
- நாணயம் – தினார்