விருதுகள் & கௌரவங்கள்
ஹட்கோ (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம்) விருது
- தூய்மை இயக்கத்திற்கான ஹட்கோ விருது உத்தரபிரதேசத்திற்கு கிடைத்தது.
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மதிப்புமிக்க ஹட்கோ விருது தூய்மை இந்தியா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் என்ற பிரிவில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
ரமோன் மகசேசே விருது:
- திபெத்திய பௌத்த மதகுரு தலாய் லாமாவுக்கு 1959-ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வழங்கப்பட்டது.
- ஆசியாவின் நோபல் விருதாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது 1959-ஆம் ஆண்டு தலாய் லாமாவுக்கு அறிவிக்கப்பட்டது.
ரமோன் மகசேசே விருது பற்றி:
- பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசேவின் மக்கள் சேவை, நல்ல நிர்வாகம், நடைமுறைக்கு உகந்த லட்சியவாதம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், ராக்ஃபெல்லர் பிரதர்ஸ் நிதி அறக்கட்டளை மற்றும் பிலிப்பைன்ஸ் அரசால் ரமோன் மகசேசே விருது தோற்றுவிக்கப்பட்டது.
- கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த விருது ’ஆசியாவின் நோபல் பரிசு’ என்று உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
- பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
- முதல் ரமோன் மகசேசே விருது வழங்கும் விழா 1958 ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது.
கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு
- 2023 ஆம் ஆண்டுக்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு அலெஸ்ஸாண்ட்ரா கோரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரேசில் அமேசானைச் சேர்ந்த முண்டுருகு பழங்குடிப் பெண்ணான அலெசாண்ட்ரா கேராப், 2023 கோல்ட்மேன் சுற்றுச்கசூழல் பரிசைப் பெற்றுள்ளார்.
- பழங்குடிகளின் பிராந்தியத்தில் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
- கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு அல்லது “பசுமை நோபல்“ என்பது உலகின் ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு அவர்களின் அடிமட்டப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- வெற்றியாளர்கள் அவர்கள் எவ்வாறு பொருத்தமாக இருக்கிறார்கள் என்பதைப் பயன்படுத்த $ 200,000 மானியத்தைப் பெறுகிறார்கள்.