வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய மருத்துவர் தினம் – ஜூலை 1

  • சமூகத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரித்துள்ளது.
  • 2023 கருப்பொருள் – நெகிழ்ச்சி மற்றும் குணப்படுத்தும் கரங்களைக் கொண்டாடுதல்.

வரலாறு

  • இது புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.
  • அவர் தனது வாழ்க்கையை மருத்துவத் தொழிலுக்காக அர்ப்பணித்ததோடு சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.
  • 1991 ஆம் ஆண்டு இந்திய அரசு ஜூலை 1 ஆம் தேதியை தேசிய மருத்துவர் தினமாக அறிவித்தது.

சர்வதேச நெகிழி பை இல்லா தினம் – ஜூலை 3

  • இது சுற்றுச்சூழலில் நெகிழி மாசுபாட்டின் தீவிரமான மற்றும் அவசரப் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • கருப்பொருள் – நெகிழி இல்லா உலகத்திற்காக வாதிடுதல் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்றுகளை ஊக்குவித்தல்.
Next வரலாறு >