வரலாறு

பாதுகாப்பு:

  • நாட்டின் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்திறனை பரிசோதிக்கும் புதிய சாதனம் சென்னையில் அறிமுகம்

பிரம்மோஸ் திட்டம் பற்றி:

  • இது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியாகும்.
  • இது 1998 இல் தொடங்கப்பட்டபோது 30% மட்டுமே இருந்த உள்நாட்டு திறன் தற்போது நீண்ட தூரம் வந்துள்ளது.இதன்மூலம் கொள்முதல் செலவு 75% குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இத்திட்டம் 25,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளது.
  • சமீபத்தில்   டேட்டா பேட்டர்ன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த 27வது பிரம்மோஸ் ஏவுகணை சோதனைக் கருவியை (COE) அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.

முக்கியமான நாட்கள்

  • உலக வானிலை நாள் – மார்ச் 23
  • உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று உலக வானிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் மனித நடத்தைக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கும் இடையிலான ஒன்றோடொன்று இணைந்ததன் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
  • 2023 உலக வானிலை தினத்தின் கருப்பொருள் ‘தலைமுறைகளை தாண்டிய வானிலை, காலநிலை, நீர் ஆகிவற்றின் எதிர்காலம்.’
  • இது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் வருங்கால சந்ததியினருக்கான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
Next வரலாறு >

People also Read