முக்கிய தினங்கள்
உலக MSME தினம் 2025
ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 27ஐ சர்வதேச MSME தினமாக அறிவித்துள்ளது.
2025க்கான கருப்பொருள் – ” Enhancing the Role of MSMEs as Drivers of Sustainable Growth and Innovation
இவை இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக உள்ளன; மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் சுமார் 30% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் 45%க்கும் மேல் பங்களிக்கின்றன.
இந்தியாவில், இவை விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக உருவாகி வருகின்றன.
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினம் 2025
உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினம் 2025: ஜூன் 26ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது உலகம் முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025க்கான கருப்பொருள் ” Break the Cycle. #StopOrganizedCrime