புகழ்பெற்ற நபர்கள்
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்
- பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் அவர்களின் நினைவு தினம் ஏப்ரல் 8ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கியம், தேசியவாதம் மற்றும் வங்காளத்தின் கலாச்சார விழிப்புணர்விற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன.
- தேசியவாதமும் இலக்கியமும்: சந்நியாசி கலகத்தை விவரிக்கும் ஆனந்தமடம் (ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டது) போன்ற படைப்புகள் மூலம், பங்கிம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக மாறினார்.
- இந்தியாவின் தேசீய கீதமான வந்தே மாதரம், பங்கிமின் ஆனந்தமடம் நூலிலிருந்து தோன்றியது, இது சுதந்திர இயக்கத்தின் சின்னமாக மாறியது.
- புகழ்பெற்ற படைப்புகள்: ராஜ்மோகன்ஸ் வைஃப் (1864) (ஒரு இந்தியரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில நாவல்). அவரது நாவல்களான துர்கேஷ்நந்தினி (1865), கபாலகுண்டலா (1866), மற்றும் விஷவிருக்ஷம் (1873) ஆகியவை பெண்களின் உரிமைகள், குழந்தைத் திருமணம் மற்றும் சாதி பாகுபாடு போன்ற சமூகப் பிரச்சினைகளை அணுகின.