முக்கிய நாட்கள்
உலக சுகாதார தினம் 2025
- உலக சுகாதார அமைப்பு (WHO) 1948இல் நிறுவப்பட்டதன் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு, கருப்பொருள் “Healthy Beginnings, Hopeful Futures”.
- தடுக்கக்கூடிய இறப்புகளைக் குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கும் ஓராண்டு உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கி, தாய் மற்றும் பச்சிளம் குழந்தை நலனை முன்னிலைப்படுத்துகிறது.
இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்
இந்தியாவும் இலங்கையும் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
- அவை பாதுகாப்பு, ஆற்றல் துறை ஒத்துழைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், சுகாதாரம் மற்றும் பல்துறை உதவிகளை உள்ளடக்கியது.
- குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் 1960இல் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையின் எச்சங்கள், இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் வேசாக் விழாவின் போது (புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மறைவு நினைவுநாள்) இலங்கைக்கு கண்காட்சிக்காக அனுப்பப்படும்.
- இலங்கையின் வெளிநாட்டு கடன் நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க, இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.