முக்கிய தினங்கள்
உலக காசநோய் தினம்
- உலகின் மிகக் கொடிய தொற்றுநோயான காசநோயை (TB) முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசரத்தை அதிகரிக்க மார்ச் 24 உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது
- 1882 மார்ச் 24 அன்று டாக்டர் ராபர்ட் கோச் காசநோய்க்கு காரணமான பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததாக அறிவித்த நாளைக் குறிக்கிறது, இது இந்த நோயைக் கண்டறிவதற்கும் குணப்படுத்துவதற்கும் வழிவகுத்தது.
- கருப்பொருள் ““Yes! We Can End TB: Commit, Invest, Deliver”
தியாகிகள் தினம் – மார்ச் 23
- இந்தியாவில் தியாகிகள் தினம் (Martyrs’ Day) அல்லது ஷஹீத் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது,
- இது நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீர ஆன்மாக்களை கௌரவிக்கும் புனிதமான நிகழ்வாகும்.
- இது 1931ல் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாளாகும் .
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
தவாஸ்யா
- மார்ச் 22, 2025 அன்று கிரிவாக்-வகை போர்க்கப்பல்களில் கடைசி கப்பலான ‘தவாஸ்யா’, கோவா கப்பல் தளத்தில் (GSL) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது இந்திய கடற்படையின் சுய-சார்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி திறன்களில் ஒரு மைல் கல்லாகும் .
- இந்தியாவும் ரஷ்யாவும் அக்டோபர் 2016ல் மேலும் நான்கு கிரிவாக்-வகை போர்க்கப்பல்களுக்கு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் (IGA) கையெழுத்திட்டன.
ஒப்பந்தத்தின் படி :
- இரண்டு கப்பல்கள் நேரடியாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
- இரண்டு கப்பல்கள் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் கீழ் கோவா கப்பல் தளத்தில் உற்பத்தி செய்யப்பட்டன.
- இந்தியா உள்நாட்டு போர்க்கப்பல் கட்டுமானத்திற்கு மாறுவதால், தவாஸ்யா வெளிநாட்டு உரிமத்தின் கீழ் கட்டப்பட்ட கடைசி போர்க்கப்பலாக இருக்கும்
விருதுகள் & கௌரவங்கள்
- ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா (88) 59வது ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- இதன் மூலம், இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதைப் பெறும் சத்தீஸ்கரைச் சேர்ந்த முதல் நபர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
- வினோத் குமார் சுக்லா இந்த விருதைப் பெறும் 12வது ஹிந்தி எழுத்தாளர் ஆவார்.
1999ல், வினோத் குமார் சுக்லா கேந்திர சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்