வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச காடுகள் தினம் 2025

  • சர்வதேச காடுகள் தினம், உலக காடுகள் தினம் (WFD) என்றும் அழைக்கப்படுகிறது, மனிதகுலம் மற்றும் பூமியின் உயிர்வாழ்வுக்கு காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 2025 WFD-ன் கருப்பொருள் “காடுகள் மற்றும் உணவு” ஆகும்.
  • சர்வதேச காடுகள் தினம் 1971ல் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நிறுவிய “உலக வனவியல் தினம்” என்பதிலிருந்து உருவானது.
  • இது 2012ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

 

உலக சிட்டுக்குருவி தினம்ள

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது,
  • குறைந்து வரும் சிட்டுக்குருவி எண்ணிக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் சூழலியல் சமநிலைக்கு இந்த முக்கியமான பறவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
  • இது 2010ல் “நேச்சர் ஃபோரெவர்” (ஒரு பறவை பாதுகாப்பு அமைப்பு) மூலம் தொடங்கப்பட்டது மற்றும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • 2025 கருப்பொருள்: ‘இயற்கையின் சிறிய தூதர்களுக்கு அஞ்சலி’
  • டெல்லி மற்றும் பீகாரின் மாநிலப் பறவையாகும்.
  • IUCN சிவப்பு பட்டியல் – குறைந்த கவலை நிலையாகும்.

 

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

பயிற்சி சீ டிராகன் 2025

  • இந்தியா 2025ல், இரண்டு வார பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ASW) பயிற்சியில் வெற்றிகரமாக பங்கேற்றது.
  • சீ டிராகன் பயிற்சி என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நட்பு நாடுகளிடையே கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆண்டுதோறும் நடத்தப்படும் பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சியாகும்.
  • அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற்படை இப்பயிற்சியை நடத்தியது.
  • பங்கேற்ற நாடுகள் : இந்தியா (2021 முதல்), ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா.
Next Current Affairs வரலாறு >