வரலாறு

முக்கிய தினங்கள்

உலக சிறுநீரக நல தினம்

  • ஆண்டுதோறும் மார்ச் 13 ம் தேதி  கடைப் பிடிக்கப்படுகிறது. 
  • 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்  “உங்களது சிறுநீரகங்கள் நலமா?” 
  • பருவநிலை மாறுதல், அதீத வெப்பநிலை, காற்று மாசுபாடு மற்றும் வேறு பல காரணங்களால் ஆரோக்கியமான நபர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட முடியும்.
  •  பெரும்பாலும், சிறுநீரக செயலிழப்பு இறுதியில் கண்டறியப்படுகிறது, அதன் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது உறுப்பு மாற்று சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
  • தமிழகத்தில் 18% பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், 25% பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகளாகவும் உள்ளனர்.

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் 

‘பெல்’ நிறுவனத்துடன் ரூ.2,906 கோடியில் ஒப்பந்தம்

  • இந்திய விமானப் படைக்கு (ஐஏஎஃப்) எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ரேடார்களை (அஸ்வினி) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புச் செயலர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது. 
  • இந்த ரேடாரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. 
  • இது அதிவேக போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தாக்குதல்களை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டது.

தர்ம கார்டியன் பயிற்சி

    • இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு இராணுவப் பயிற்சியான தர்ம கார்டியன் பயிற்சியின் 6வது பதிப்பு ஜப்பானில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
    • இது இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சியாகும். 
    • இது நகர்ப்புற நிலப்பரப்பில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மூலம் போர் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் (UNPKO) மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.
  •  பிற இந்தியா-ஜப்பான் பல்தரப்பு பயிற்சிகள்
  • வீர் கார்டியன் (விமானப்படை)
  • ஷின்யூ மைத்ரி (விமானப்படை)
  • JIMEX (கடற்படை)
  • மலபார் (கடற்படை) (ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன்).

 

உலக அமைப்புகள் உடன்படிக்கைகள் 

இந்தியாமோரீஷஸ் இடையே 8 ஒப்பந்தங்கள்

  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மோரீஷஸ் வங்கி இடையில் உள்ளூர் கரன்சியில் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தம்.
  • மோரீஷஸ் அரசு (கடன் பெறுபவர்) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (கடனளிப்பவர்) இடையில் கடன் ஒப்பந்தம்.
  • குறு, சிறு, நடுத்தர தொழில்கள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம்.
  • வெளியுறவு பயிற்சி தொடர் பாகமாக, வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தம்.
  • இந்திய அரசின் தேசிய நல்லாட்சி மையம் மற்றும் மோரீஷஸ் பொதுச் சேவை நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம்.
  • இந்திய கடற்படை மற்றும் மோரீஷஸ் அரசு இடையில் தகவல் பகிர்வுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தம்.
  • இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் மோரீஷஸ் கடல்சார் மண்டல நிர்வாகம் மற்றும் ஆய்வு துறை இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம்.
  • இந்திய அமலாக்கத் துறை மற்றும் மோரீஷஸ் நிதி குற்றங்கள் தடுப்பு ஆணையம் இடையிலான ஒப்பந்தம்.
Next Current Affairs வரலாறு >