முக்கிய தினங்கள்
சர்வதேச மகளிர் தினம் 2025
- மார்ச் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது
- சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் – “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல்”
- சர்வதேச மகளிர் தினத்தின் 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் .இந்திய குடியரசுத் தலைவர், புது தில்லியில் ‘நாரி சக்தி சே விக்சித் பாரத்’ என்ற கருப்பொருளில் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார்,
- இந்த மாநாடு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை விருதுகள்
- 2025-ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருதானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தராக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.1.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது
- பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான மாநில விருது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த க.சௌமியாவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
- மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் மற்றும் பதக்கங்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.