வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ரஷியாவிடம் இருந்து டி72 பீரங்கி என்ஜின்கள்

  • பாதுகாப்பு அமைச்சகம், டி-72 ரக பீரங்கிகளுக்கான என்ஜின்களை கொள்முதல் செய்ய ரஷியாவின் ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
  • இது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்குகிறது 

உலக உயர் இரத்த அழுத்த மாநாடு 2025

  • ஆறாவது உலக உயர் இரத்த அழுத்த மாநாடு 2025, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது, குறைந்த சோடியம் உப்பு மாற்றீடுகள் (LSSS) உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் உள்ள பங்கை முன்னிலைப்படுத்துகிறது 
  • பல்வேறு துறைகளின் நிபுணர்கள் LSSS பயன்பாட்டை ஊக்குவிக்க பொது விழிப்புணர்வு, மலிவான  விலை மற்றும் கொள்கை ஆதரவின் தேவையை வலியுறுத்தினர்.
  • தி ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த், ரிசால்வ் டு சேவ் லைவ்ஸ் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு 

  • 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு 21 மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் ப.விமலா, சாகித்யா அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளார் 
  • இப்புத்தகம் பெண்கள் மீது ஆண்களின் அணுகுமுறைகளைக் குறித்து பேசுகிறது.
  • விருதாளருக்கு ரூ. 50,000 பரிசுத் தொகையும் தாமிரப் பட்டயம் வழங்கப்படுகிறது
Next Current Affairs வரலாறு >