முக்கிய தினங்கள்
கலைச் செம்மல் விருது
- அரசின் கலை பண்பாட்டுத்துறை, ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவியம், சிற்பக் கலை போன்ற பல பிரிவுகளில் திறமையான கலைஞர்களுக்கு “கலைச்செம்மல்” விருது வழங்குகிறது.
- இந்த விருது செப்புப் பட்டயம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை உட்படுத்தி வழங்கப்படுகிறது.
- 2024-25 ஆம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு மரபுவழி ஓவியம்: ஆ. மணிவேலு,மரபுவழி சிற்பம்: வே. பாலச்சந்தர், கோ. கன்னியப்பன்,நவீனபாணி ஓவியம்: கி. முரளிதரன், அ. செல்வராஜ்,நவீனபாணி சிற்பம்: நா. ராகவன் ஆறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலைஞர் எழுதுகோல் விருது
- 2023-ஆம் ஆண்டுக்கான விருது, பத்திரிகையாளர் கள் நக்கீரன் ஆர்.கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார்
- இந்த விருது தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியதா கும்.
- 2021-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கலைஞர் எழுதுகோல் விருதிணை வழங்கி வருகிறது
பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது
- கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் அம்மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
- 1966-ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் தொடங்கியதில் இருந்து, இந்தியாவும் பார்படாஸும் தொடர்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் ஒரு வலுவான ஒத்துழைப்பை வளர்த்துள்ளன