முக்கிய இடங்கள்
- கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் உள்ள ஸ்ரீ சித்தாரூடா ரயில் நிலையத்தில் 1507 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஹூப்ளி இப்போது கின்னஸ் புத்தகத்தில் மிக நீளமான மேடையைக் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிளாட்பாரம் இப்போது 1,366.33 மீட்டர் நீளத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் கேரளாவின் கொல்லம் சந்திப்பு மூன்றாவது நீளமான நடைமேடையைக் கொண்டுள்ளது.
விளையாட்டு
- இந்தியாவின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், புதுதில்லியில் 13வது IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை தொடங்கி வைத்தார்.
நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், சவீதி பூரா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா ஒரு வலுவான அணியை போட்டிக்கு களமிறக்கியுள்ளது.
போட்டியின் பிராண்ட் அம்பாசிடர்கள் மேரி கோம் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஃபர்ஹான் அக்தர்.
விருதுகள் & கௌரவங்கள்
- சரஸ்வதி சம்மான் விருது
- எழுத்தாளர் சிவசங்கரி 2022ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ விருதை வென்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டுக்கான’ சூர்ய வம்சம் நினைவலைகள்’ என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி சம்மான் பற்றி:
- 1991 முதல், கே.கே. பிர்லா அறக்கட்டளை சரஸ்வதி சம்மான் விருதை வழங்கி வருகிறது.
- விருது பெறுபவர்க்கு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது
இந்தியாவின் 22 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு – சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது .
- ஏற்கனவே தமிழில் இவ்விருதை இந்திரா பார்த்தசாரதி மற்றும்
ஏ.ஏ. மணவாளன் ஆகியோர் பெற்றுள்ளனர்.