பாதுகாப்பு
‘எகுவெரின்’ இராணுவப் பயிற்சி
- இந்தியா-மாலத்தீவு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘எகுவெரின்’ இன் 13வது பதிப்பு பிப்ரவரி 2-15, 2025 வரை மாலத்தீவில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே மாறி மாறி நடைபெறும் இந்த இருவருட பயிற்சி, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மைல்கல்லாக உள்ளது.
- 13வது எகுவெரின் பயிற்சியின் தொடக்க விழா பிப்ரவரி 2, 2025 அன்று மாலத்தீவின் மாஃபிலாஃபுஷியில் உள்ள மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படைகளின் (MNDF) அதிகாரப்பூர்வ கூட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்றது
பொற்பனைக்கோட்டை அகழாய்வு
- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் எலும்புமுனைக் கருவியும், தங்கத்துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இங்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
- கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்புமுனைக் கருவி, கார்னீலியன் பாசிமணி உள்ளிட்ட 533 தொல்பொருள்கள் கிடைத்தன
- மேலும் 8 அடி சுற்றளவுள்ள வட்டவடிவ செங்கல் கட்டுமானம் ஒன்றும் வெளிப்பட்டது. வட்டச்சிலுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக்கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காக, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், அகேட் கல்மணி, தக்களி, எலும்பு முனைக்கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடு மண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலானப் பொருள்கள் என 1,743 தொல்பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன.