வரலாறு

முக்கிய தினங்கள்

இந்திய உறுப்பு தான தினம்

  • உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 3 அன்று ஆண்டுதோறும் இந்திய உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 1994 ஆகஸ்ட் 3 அன்று முதல் முறையாக இறந்தவரின் இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பு

  • உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரம்

  • புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024 கருப்பொருள்: Closing the gap: Breastfeeding support for all.

நியமனங்கள்

BSF-ன் புதிய இயக்குனர்

  • சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) புதிய இயக்குனராக தல்ஜித் சிங் சௌதரி நியமிக்கப்பட்டார்.
  • இவர் சாஸ்த்ரா சீமா பாலின் (SSB) இயக்குனர் ஜெனரலாக பணியாற்றினார் மேலும் இவருக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் ஜெனரலாக கூடுதல் வழங்கப்பட்டுள்ளது.

BSF பற்றி

  • V நிறுவப்பட்டது – 1965
  • V மத்திய ஆயுதப் போலீஸ் படையின் ஒரு பிரிவாகும்.
  • உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 

Next Current Affairs வரலாறு >