நியமனங்கள்
35வது வெளியுறவுத்துறைச் செயலாளர்
- இந்தியாவின் 35வது வெளியுறவுத்துறைச் செயலாளராக விக்ரம் மிஸ்ரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
- அவர் அமைச்சரவையின் நியமனக் குழுவால் (ACC) நியமிக்கப்படுகிறார்.
- இந்திய முன்னுரிமை வரிசையில் வெளியுறவு செயலாளர் 23வது இடத்தில் உள்ளார்.
அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) பற்றி
- உருவாக்கம் – ஜனவரி 26, 1950
- தலைமை – பிரதமர்
- குறிக்கோள் – மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கு மூத்த அதிகாரிகளை நியமித்தல்.