வரலாறு

முக்கிய தினங்கள் 

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான சர்வதேச  தினம் 2024

  • வருங்கால சந்ததியினருக்காக நில வளங்களை பாதுகாக்க கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜூன் 17 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  – United for Land. Our Legacy. Our Future.
  • 2007 ஆம் ஆண்டில், ஐநா 2010 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளை ஐக்கிய நாடுகளின் பாலைவனங்களுக்கான தசாப்தம் மற்றும் பாலைவனமாக்கலுக்கு எதிரான போராட்டமாக அறிவித்தது.

நியமனங்கள்

தற்காலிக சபாநாயகர் 

  • 18வது மக்களவையின் தற்காலிக  சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.
  • புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தற்காலிக சபாநாயகரின் முதன்மைக் கடமையாகும்.

குறிப்பு

  • சபாநாயகர் தேர்தல் வரை சபாநாயகர் கடமைகளைச் செய்ய அரசியலமைப்பின் 95 (1) வது பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்படுகிறது.
  • தற்கால சபாநாயகர் பற்றி இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

 

Next Current Affairs வரலாறு >