வரலாறு

முக்கிய தினங்கள்

உலக ஆமைகள்  தினம்

  • ஆமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினம் முதன்முதலில் 2000 இல் அனுசரிக்கப்பட்டது.

குறிப்பு

  • தேசிய கடல் ஆமை செயல் திட்டம் – ஜனவரி 2021.
  • ஐந்து வகையான ஆமை இனங்கள் இந்தியாவில் உள்ளன – ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, லாக்கர்ஹெட், ஹாக்ஸ்பில், லெதர்பேக்.
  • அவை இந்தியாவில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

விருதுகள் மற்றும் கௌரவம்

சர்வதேச புக்கர் பரிசு 2024

  • 2024ம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை ‘கெய்ரோஸ் புத்தகம் வென்றுள்ளது.
  • இப்புத்தகத்தை ஜென்னி எர்பென்பெக் எழுதியுள்ளார் மற்றும் மைக்கேல் ஹாஃப்மேன் மொழிபெயர்த்துள்ளார்.

சர்வதேச புக்கர் பரிசை வென்ற இந்திய எழுத்தாளர்கள்

  • 1971 –  V.S. நைபால் எழுதிய In a Free State
  • 1981 – சல்மான் ருஷ்டி எழுதிய Midnight’s Children
  • 1997 – அருந்ததி ராய் எழுதிய The God of Small Things
  • 2006 – கிரண் தேசாய் எழுதிய The Inheritance of Loss
  • 2008 – அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger
  • 2022 – கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய Tomb of Sand

நியமனங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி

  • ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி ஆர்.மகாதேவனை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.
  • தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற உள்ளார்.

குறிப்பு

  • உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பின் 217 வது பிரிவின் கீழ் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • இவர்கள் இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
Next Current Affairs வரலாறு >

People also Read