வரலாறு

முக்கிய தினங்கள்

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம்

  • உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1992 இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் புவி உச்சிமாநாடு மீதான மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்  : Be Part of the Plan

உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள்

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024

  • சமீபத்தில் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெற்றது.
  • இந்த  உச்சிமாநாடு நெதர்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து நிலையான எரிசக்தி கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தியா முதல் முறையாக இந்த உச்சிமாநாட்டில் தனது அரங்கத்தை  அமைத்துள்ளது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் இந்த அரங்கம்  அமைக்கப்பட்டது.

குறிப்பு

  • தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் – ஜனவரி 2023.
  • 2030-க்குள் 5 MMT (மில்லியன் மெட்ரிக் டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை இந்தியா அடைய இலக்கு வைத்துள்ளது.
  • எஃகு, போக்குவரத்து, கப்பல் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.
  • பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்பு தொகுப்பு இடங்களைத் தொடங்கியுள்ளது.
Next Current Affairs வரலாறு >