வரலாறு

முக்கிய தினங்கள்

உலக தேனீ தினம் 2024

  • உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம்  அன்டன் ஜான்சாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Bee Engaged with Youth”

விருதுகள் மற்றும் கௌரவம்

விட்லி தங்க விருது 2024

  • பெருநாரையை (லெப்டோப்டிலோஸ் டூபியஸ்) பாதுகாத்ததற்காக சமீபத்தில் பூர்ணிமா தேவி பர்மனுக்கு 2024ம் ஆண்டிற்கான விட்லி தங்க விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருது ‘பசுமை ஆஸ்கார்’ என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பு

  • இவர் ஏற்கனவே 2022 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருதைப் பெற்றுள்ளார்.
  • இவர் அஸ்ஸாமில் உள்ள கிராமப்புற பெண்களின் குழுவான “ஹர்கிலா இராணுவத்தை” உருவாக்கினார் .

பெருநாரை பற்றி

  • IUCN நிலை – ஆபத்தானது
  • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் அட்டவணை IV இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது
Next Current Affairs வரலாறு >