வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச தாவர ஆரோக்கிய தினம்

  • தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் 2022 இல் இந்த தினம் நிறுவப்பட்டது.
  • 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள் : ‘Plant Health, Safe Trade, Digital Technology.’

ÃVmïV©A, ¼>EB ÃVmïV©A \u®D ÃBºï«kV>D

சக்தி கூட்டு ராணுவ பயிற்சி

  • இந்தியா-பிரான்ஸ் நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியான  சக்தியின் 7வது பதிப்பு மேகாலயாவில் உள்ள உம்ரோயில் தொடங்கியது.
  • சக்தி பயிற்சி என்பது இந்தியாவிலும் பிரான்சிலும் மாறி மாறி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும்.
  • கடைசி பதிப்பு 2021 நவம்பர் மாதம் பிரான்சில் நடத்தப்பட்டது.
  • முதல் பதிப்பு – 2011.

பிரான்ஸ் பற்றி

  • தலைநகர் – பாரிஸ்
  • ஜனாதிபதி – இம்மானுவேல் மேக்ரான்
  • பிரதமர் – கேப்ரியல் அட்டல்
  • நாணயம் – யூரோ
Next Current Affairs வரலாறு >