விருதுகள்
வரலாறு படைத்த ’நாட்டு நாட்டு’ பாடல் : தமிழ் ஆவணக் குறும்படம்
-
- புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடலானது, சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்று வரலாறு படைத்துள்ளது.
- தமிழகத்தின் முதுமலை வனப்பகுதியில் தமிழில் எடுக்கப்பட்ட ’தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
- சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை எம்.எம்.கீரவாணி பெற்றுள்ளார். ’நாட்டு நாட்டு’பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த ஆவணக் குறும்படம்: இந்தியாவுக்கு மற்றொரு பெருமையாக ’தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணக் குறும்படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. முதுமலை வனப் பகுதியில் இரு யானைகளுக்கும் அவற்றைப் பாதுகாத்து வரும் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விளக்கும் வகையில் ’தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற 40 நிமிஷ குறும்படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.
விருதுகள்
முதல் ஆசிய பெண்
- சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள மிச்செல் யோ, மலேசியாவில் பிறந்த சீனப் பெண். சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர்:
- பிரெண்டன் ஃபிரசர் ( தி வேல்).
சிறந்த ஒளிப்பதிவு:
- ஜேம்ஸ் பிரண்ட் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்)
சிறந்த பின்னணி இசை:
- வோல்கர் பெர்டெல்மான் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட் )
சிறந்த தழுவல் திரைக்கதை:
- விமன் டாக்கிங்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
- ஆல் குயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரண்ட்
ஒலிப்பதிவு:
- டாப் கன்: மேவ்ரிக்
ஆடை வடிவமைப்பாளர்:
- – ரூத் கார்ட்டர் (பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர்)
சர்வதேச திரைப்படம்:
- ஆல் குயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரண்ட் (ஜெர்மன்)
அனிமேஷன் திரைப்படம்:
- தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்
ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்:
- அட்ரியன் மொரோட், ஜீடி ஜின், அன்னெமரி பிராட்லி ( தி வேல்)
விஷீவல் எபெக்ட்ஸ்:
- ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹம், எரிக் சைண்டன், டேனியல் பாரெட் (அவதார்: தி வே ஆப் வாட்டர்)