வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 9

  • ஊழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை நிவர்த்தி செய்வதற்கும் தடுப்பதற்கும் உலகளாவிய முயற்சிகளை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும்  சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 2003 இல் அனுசரிக்கப்பட்டது
  • கருத்துரு  2023: UNCAC at 20: Uniting the World Against Corruption.

பாதுகாப்பு

மஹாசாகர்

  • இது  பிராந்தியத்தில் அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் தீவிரப் பாதுகாப்புக்கான கடல்சார் தலைவர்கள் இடையே உயர்நிலைக் காணொலிக் கலந்துரையாடலுக்கான இந்தியக் கடற்படையின் களப்பணி முன்முயற்சியாகும் .
  • இது இந்தியாவின் சாகர் திட்டத்தின் நோக்கமான  ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.

நியமனங்கள்

மிசோரம் முதல்வர்

  • மிசோரம் முதலமைச்சராக லால்டுஹோமா பதவியேற்றார்.
  • இவர் மிசோரம் மக்கள் இயக்கம் (ZPM) கட்சியின் தலைவராவார்.

 

Next Current Affairs வரலாறு >