வரலாறு

விளையாட்டு

ஆசிய ஹாக்கி கோப்பை 2023

  • சென்னையில் நடைபெற்ற 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-3 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றது.
  • இப்போட்டியில் இந்தியா சாம்பியனாவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்ற இந்தியா, தற்போது போட்டியில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக உருவெடுத்துள்ளது.

சர்வதேச அலைச்சறுக்கு

  • சென்னை கோவளம் கடற்கரையில் அலைச்சறுக்கு போட்டியை தொடங்கி வைத்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

2-ஆவது தமிழ்நாடு சர்வதேச காற்றாடி திருவிழா

  • மாமல்லபுரத்தில் இரண்டாவது முறையாக நடைபெறும் சர்வதேச காற்றாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
  • இதில் இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிரான்ஸ், வியட்நாம், சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச காற்றாடி அணிகள், 200-க்கும் மேற்பட்ட காற்றாடிகளுடன் கலந்து கொள்ள உள்ளன.
  • இந்த ஆண்டு காற்றாடி விழாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அலைகளின் சிறகுகள்’, ‘கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றுங்கள்’, ‘தாய் பூமியைக் காப்பாற்றுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, பல்வேறு கடல் விலங்குகள் வடிவத்திலான காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. 

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

திருச்சி சிறந்த மாநகராட்சி

  • சுதந்திரதினத்தையொட்டி, தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை திருச்சியும், இரண்டாவது பரிசை தாம்பரமும் பெற்றுள்ளன. 
  • மேலும், ராமேசுவரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

நல்லாளுமை விருது

  • அரசுத் துறைகளில் புதுமைகளைப் புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக 2 மாவட்ட ஆட்சியர்கள், ஒரு காவல் கண்காணிப்பாளர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகிய 4 பேருக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட உள்ளது.
  • நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அடிப்படையில் மகப்பேறு இறப்பைக் குறைத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளை அந்த மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஏ.அருண் தம்புராஜ் மேற்கொண்டார். அவர், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார். அவர் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இதேபோல, பள்ளிக்கூடத்திட்டத்தின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை கோவை ஊரகக் காவல் காண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் மேற்கொண்டுள்ளார்.
  • சென்னை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற கைவிடப்பட்ட நோயாளிகளுக்கான பிரத்யேக பிரிவு அமைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் இ.தேரணிராஜன் செயல்படுத்தி வருகிறார். 
  • ‘உதிரம் உயர்த்துவோம் திட்டம்’ மூலம் வளரிளம் பெண்களின் ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் முன்னோடித் திட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் டி.பிரபுசங்கர் மேற்கொண்டுள்ளார். இந்தப் பணிகளுக்காக அவர்களுக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்படுகிறது.
  • இதேபோல், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை கைப்பேசி செயலி மற்றும் மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்கும் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மேற்கொண்டு வருகிறது. இந்த முகமைக்கும் நல்லாளுமை விருது வழங்கப்பட உள்ளது.

நியமனங்கள்

மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு களைய குழு

  • பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இனப் பிரச்னைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
  • திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.

குறிப்பு

  • ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் குறித்து பரிந்துரைகள் வழங்குவதற்காக கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • அதைப்போல சிறார் இல்லங்களின் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கும் கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு முன்னரே குழு அமைத்துள்ளது.
Next வரலாறு >