வரலாற

முக்கிய தினங்கள்

பிரவாசி பாரதிய திவாஸ் (PBD)

  • 18வது பிரவாசி பாரதிய திவாஸ் (PBD) மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகிறது, இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மற்றும் உலகளாவிய இந்திய புலம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் “விக்சித் பாரத்திற்கான புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு”
  • வெளிநாடு வாழ் இந்திய சமூகத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தவும், கலாச்சார மீள்இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்கவும் PBD இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.
  • மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஜனவரி 9, 1915 அன்று திரும்பியதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
  • முதல் PBD மாநாடு 2003இல் நடைபெற்றது, 2015 முதல் வெளியுறவு அமைச்சகம் இதை நடத்தி வருகிறது.

உலக அமைப்புகள்

பிரிக்ஸ் (BRICS)

  • இந்தோனேசியா பிரிக்ஸ் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பில் முழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாக, குழுவின் தலைமை நாடான பிரேசில் அறிவித்துள்ளது.
  • தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மக்கள்தொகையையும்,இந்தோனேசியா கொண்டுள்ளது.

பிரிக்ஸ் பற்றி:

  • தோற்றம்: பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல் 2001-ல் ‘BRICs’ என்ற சொற்றொடரை உருவாக்கினார், இது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களை குறிக்கிறது.
  • பிரிக்ஸ் 2009-ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது, 2010-ல் தென்னாப்பிரிக்கா இணைந்தது.
  • எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் பிரிக்ஸில் இணைந்துள்ளன.

நோக்கம்: உலகளாவிய ஆளுமை நிறுவனங்களை சீர்திருத்துவதும், தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் பங்களிப்பை வழங்குவதும் ஆகும்.

நியமனங்கள்

இந்திய தடகள கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமனம்

  • ஆசிய தங்கப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் மற்றும் பத்மஸ்ரீ பகதூர் சிங் சகு, இந்திய தடகள கூட்டமைப்பின் (AFI) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இவர் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார்

AF இந்திய தடகள கூட்டமைப்பு

  • இந்திய தடகள கூட்டமைப்பு 1946இல் நிறுவப்பட்டது, இந்தியாவில் தடகளத்திற்கான ஆளும் அமைப்பாக செயல்படுகிறது.
  • சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கம் (தற்போது உலக தடகளம்) மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகிய இரண்டாலும் AFI அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் புதிய தலைவர்

  • டாக்டர் நாராயணன் தற்போது திரவ விசைத்திறன் அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குனராக உள்ளார்
  • ராக்கெட் மற்றும் விண்கலன் விசைத்திறன் நிபுணரான டாக்டர் நாராயணன், 1984இல் இஸ்ரோவில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்

 

Next Current Affairs வரலாறு >