முக்கிய நாட்கள்

தேசிய மாசுக்கட்டுப்பாட்டு நாள் 

  • கடைப்பிடிக்கப்படும் நாள்: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நோக்கம்:1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு துயரச் சம்பவத்தில் (Bhopal Gas Tragedy) உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மெத்தில் ஐசோசயனேட் வாயு கசிவு ஏற்பட்டது.
  • தொழில்துறை மற்றும் பிற வகையான மாசுபாட்டின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்
  • 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme 2025): ‘பசுமையான எதிர்காலத்திற்கான நிலையான வாழ்க்கை’ 

 

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் 

  • கடைப்பிடிக்கப்படும் நாள்: உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நினைவுக் கூர்வது: 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, “ஆட்கடத்தல் மற்றும் பிறரது விபச்சாரத்தை சுரண்டுவதைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டினை” (UN Convention for the Suppression of the Traffic in Persons and the Exploitation of the Prostitution of Others) நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme 2025): “கடந்த காலத்தை அங்கீகரிப்போம். நிகழ்காலத்தைச் சரிசெய்வோம். கண்ணியம் மற்றும் நீதிக்கான எதிர்காலத்தை உருவாக்குவோம்” 
Next Current Affairs முக்கிய நாட்கள் >