முக்கிய தினங்கள்

தேசிய வாசிப்பு தினம்

  • கேரளாவில் நூலக இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் புதுவயல் நாராயண பணிக்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • 2017-ஆம் ஆண்டில், பிரதமர் ‘தேசிய வாசிப்பு தினம்’ மற்றும் ‘வாசிப்பு மாதம்’ ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

உலக அகதிகள் தினம்

  • உலகெங்கிலும் உள்ள அகதிகளைக் கௌரவிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 20-ஆம் தேதி ‘உலக அகதிகள் தினம்’ சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான உலக அகதிகள் தினத்தின் கருப்பொருள் Until Everyone Is Safe என்பதாகும்.

பச்சிம்பங்க திவாஸ்

  • மேற்கு வங்காளத்தின் செழுமையான வரலாறு, கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் தனித்துவமான அடையாளத்தைப் போற்றும் வகையில், ஜூன் 20 அன்று ‘பச்சிம்பங்க திவாஸ்’ (மேற்கு வங்காள தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது.
Next முக்கிய தினங்கள >